உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்காலில் அகல்விளக்கு செய்யும் பணி!

காரைக்காலில் அகல்விளக்கு செய்யும் பணி!

காரைக்கால்: காரைக்காலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு அகல்விளக்கு செய்யும் பணி நடைப்பெற்று வருகிறது. காரைக்கால் அடுத்த மேலஒடுதுறையில் அகல்விளக்கு செய்யும் பணி நடைபெறுகிறது. வரும் 25ம் தேதி வரும் கார்த்திகை திருநாளை முன்னிட்டு மேலஒடுதுறையில் பகுதியில் உள்ள மாரிமுத்து தலைமையில்  மண்பாண்ட தொழிலாளர்கள் களிமண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை செய்யும் பணிகள் துவங்கியது.மேலும் கோட்டுச்சேரி, ஒடுதுறை உள்ளிட்ட  பகுதிகளில் கார்த்திகை திருநாளுக்கு அகல்விளக்கு செய்யும் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து மேலஒடுதுறை உள்ள மண்பாண்ட தொழிலாளர் மாரிமுத்து  கூறியது. மண்பாண்ட தொழிலில் கடந்த 20 ஆண்டுகளாக ஈடுப்பட்டு வருகிறோம் அகல் விளக்குகள் இந்த வருடம் நாகைப்பட்டினம், திருவாரூர், பொறையார் ஆகிய பகுதிகளில் இருந்து அகல்விளக்கிற்கு ஏராளமான ஆர்டர்கள் வந்துள்ளது. ஆனால் கடந்த ஒரு வாரமாக பெய்யும் மழையால் அகல் விளக்கு செய்யும் பணி தாமதமாகி வருகிறது. சகிலா என்ற கைவீல் கொண்டு அகல்விளக்கு செய்து நல்ல வெயிலில் அகல்விளக்கை காயவைத்து சுட்டு விற்பனை செய்துவருகிறோம். 100 அகல்விளக்கு ரூ.90க்கு வெளியில் உள்ள வியாபரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர். மேலும் பொங்கல் பண்டிகை வருவதால் பொங்கல் பானை செய்யும் பணி அகல் விளக்கு பணி முடிந்தவுடம் துவங்கப்படும் என்று கூறினார்.

கனமழையால் அகல் பணிகள் பாதிப்பு: காரைக்காலில் கடந்த ஒரு வாரமாக கனமழை பொய்ந்து வருகிறது. இதனால் கார்த்திகை திருநாளுக்கு அகல் செய்யும் பணிகளுக்கு பயன்படுத்து களிமண் எடுக்கம் இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மண்பாண்ட தொழிலாளர் களிமண் எடுக்கமுடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது.மேலும் வெளியில் களிமண் அதிக விளைக்கொடுத்து வாங்கு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு வாரத்துக்கு முன் அகல் செய்யும் பணிகள் நடைபெறும்.ஆனால் மழையால் அகல் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !