உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் தாயிடம் வேல் பெற்ற முருகன்: இன்று சூரசம்ஹாரம்!

திருப்பரங்குன்றத்தில் தாயிடம் வேல் பெற்ற முருகன்: இன்று சூரசம்ஹாரம்!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை நடக்கும் சூரசம்ஹார லீலைக்காக, நேற்று கோவர்த்தனாம்பிகையிடம் முருகன் வேல் பெற்றார். இன்று காலை கார்த்திகை தீப திருவிழாவிற்கான கொடியேற்றம் நடக்கிறது. கோயிலில் நேற்று மாலை சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாளுடன் சுப்பிரமணி சுவாமி, கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.அம்பாளிடம் இருந்த நவரத்தின வேல், சுவாமியின் கரத்தில் சேர்க்கப்பட்டது. இன்று மாலை 5 மணிக்கு சுவாமி சம்ஹார அலங்காரத்தில் தங்க மயில் வாகனத்திலும், வீரபாகு தேவர் குதிரை வாகனத்திலும் வீதி உலா வருவர். அப்போது சூரபத்மனை எட்டு திக்குகளிலும் சுவாமி விரட்டிச் சென்று, சன்னதி தெருவில் சொக்கநாதர் கோயில் முன், சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்.இன்று காலை நடக்கும் கார்த்திகை கொடியேற்றத்திற்கான கொடிப்பட்டம், நேற்று காலை யானையின் மீது வைத்து ரத வீதிகளில் கொண்டு செல்லப்பட்டது. கந்த சஷ்டி விரதத்தின் ஐந்தாம் நாளான இன்று பக்தர்கள் மாவு விரதம் மேற்கொள்வர். இதற்காக பக்தர்கள் நேற்று இடித்த பச்சரிசி மாவில் வெல்லம், க்கு, ஏலக்காய் சேர்த்து மாவிளக்கு தயார் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !