பாகம்பிரியாள் கோயில் சமையல்கூடம் பாழ்
ADDED :3616 days ago
திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் அன்ன தான சமையல் கூடம் பாழடைந்துள்ளதால் பக்தர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இங்கு அரசு சார்பில் அன்ன தான திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. தினமும் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்க படுகிறது. இதற்கான சமையல் கூடம் பாழடைந்துள்ளது. மழை பெய்தால் தண்ணீர் ஒழுகி சமையல் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. எலி, பல்லி, தொந்தரவும் உள்ளது. சமையல் கூடத்தை பார்க்கும் பக்தர்கள் சாப்பிட விரும்பாமல் செல்கின்றனர். பக்தர்கள் நலன்கருதி சமையல் கூடத்தை மராமத்து செய்ய தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.