உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா

கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா

கரூர்: கரூர் மாவட்டம், மண்மங்கலம் அடுத்த, பஞ்சமாதேவி கஸ்பா காலனியில் உள்ள கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக, கணபதி யாக வேள்வி, நவக்கோள் வேள்வி, குபேர மகாலட்சுமி யாக வேள்வி, மகா பூர்ணாகுதி, காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், விநாயகர் வழிபாடு, வாஸ்துசாந்தி, காப்புக் கட்டுதல், கும்ப அலங்காரம் ஆகியன நடந்தது. தொடர்ந்து, முதற்கால யாக பூஜை, மங்கள இசை, திருப்பள்ளி எழுச்சி, தமிழில் திருமுறை பாடுதல், வேதபாராயணம், பூர்ணாகுதி நிறைவு வேள்வி, நான்கு கால யாக பூஜை, கலசத்துக்கு, நேற்று முன்தினம், கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !