உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனுக்கு உகந்த கார்த்திகை!

முருகனுக்கு உகந்த கார்த்திகை!

1. திருக் கார்த்திகை என்றவுடன் தீபம் மட்டுமின்றி, தமிழ் கடவுள் முருகப் பெருமானும் சேர்ந்தே நம் நினைவுக்கு வருகிறார்.

2.சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்த தோன்றிய ஆறு சுடர்கள் சரவணப் பொய்கையில் விழுந்து, அவை 6 குழந்தைகளாக மாறின. அந்த 6 குழந்தைகளை 6 கார்த்திகை பெண்கள் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர்.

3. இந்த 6 குழந்தைகளும் ஒரே குழந்தையாகி உருவானவர்தான் முருகப்பெருமான். இதனால்தான், அவருக்கு ஆறுமுகம் என்ற பெயரும் வந்தது.

4. முருகப் பெருமானை சீராட்டி வளர்த்த பெருமைக்குரிய கார்த்திகைப் பெண்கள், கார்த்திகை நட்சத்திரமாக விண்ணில் ஒளி வீசிக் கொண்டிருக்கிறார்கள்.

5. அதனால், திருகார்த்திகை அன்று விரதம் இருந்து வழிபட்டால் முருகப் பெருமானின் அருளுக்கு எளிதில் பாத்திரமாகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !