தி.மலை தீப விழா: தங்க சூரிய பிறை வாகனத்தில் சுவாமி உலா!
ADDED :3792 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில் இரண்டாம் நாள் காலை உற்சவத்தில், தங்க சூரிய பிறை வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ராஜகோபுரம் முன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். உற்சவத்தில் மூஷிக வாகனத்தில் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கார்த்திகை மாத பிறப்பை யொட்டி, அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள ஐயப்பன் சன்னதிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.