உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலையில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

மருதமலையில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

கோவை: கோவை மருதமலை முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா கோலாகலமாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, கடவுள் அருள் பெற்றனர். கோவையில் பழமையான கோவில்களில், மருதமலை முருகன் கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருவர். கோவிலில், சஷ்டி விழா கடந்த, 11ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, ஆறு நாட்களுக்கு முருகன் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் நடந்தது. ஏழாவது நாளில் சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நடந்தது. மதியம், 3:30 மணிக்கு கோவில் வளாகத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி துவங்கியது. இதில், முருகன் நான்கு சூரன்களை வதம் செய்தார். பின், சரண கோஷம் முழங்க, அவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது. மாலை 4:30 மணிக்கு, முருகன் வெள்ளை யானை வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !