தி.மலையில் தங்கநாக வாகனத்தில் அண்ணாமலையார் வீதி உலா!
ADDED :3724 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில் நான்காம் நாளில், காலை உற்சவத்தில் தங்கநாக வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவில் காலை உற்சவத்தில் கண்ணாடி பல்லக்கில் விநாயகர் முதல் முறையாக (பள்ளிகொண்டான் ) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு கோவில் கலையரங்கத்தில் சிறுமியின் வீணை இசை நிகழ்ச்சி நடந்தது. இதனை ஏராளமானோர் ஆர்வத்துடன் ரசித்தனர்.