பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம்!
ADDED :3617 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரத்திருவிழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், கடந்த 12ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் சூரசம்ஹாரத்திருவிழா துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின், கடந்த 17ம் தேதி முருகப்பெருமான், சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நேற்றுமுன்தினம் காலை, 9:00 மணிக்கு மகா அபிேஷகமும், மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தன. இதில், வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, நேற்று மாலை, 6:00 மணிக்கு திருஊஞ்சல் உற்சவ பூர்த்தி நிகழ்ச்சியும் நடந்தது.