பொள்ளாச்சியில் சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா
ADDED :3654 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், சத்யசாய் சேவா சங்கம் சார்பில், சத்ய சாய்பாபாவின், 90வது பிறந்த நாளையொட்டி, துாய்மைப்படுத்தும் சேவை பணி நேற்று நடந்தது. சத்யசாய்பாபாவின், 90வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, பொள்ளாச்சி சத்யசாய் சேவா சங்கம் சார்பில், பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் சுத்தம் செய்யும் பணி நேற்றுமுன்தினம் நடந்தது. இதில், சத்யசாய் சேவா சங்கத்தினர், சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள், பஸ் ஸ்டாண்டை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர். தொடர்ந்து, அச்சங்கம் சார்பில் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு வஸ்தர தானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சத்யசாய் சேவா சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.