உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

உத்திரமேரூர்: காவாம்பயிர் கிராமத்தில் உள்ள, ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.உத்திரமேரூர் அடுத்துள்ள காவாம்பயிர் கிராமத்தில், கிராமத்திற்கு சொந்த௦மான ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி பழுதடைந்து இருந்தது.இதையடுத்து, இக்கோவிலை புனரமைக்க, அப்பகுதி வாசிகள் சார்பில் தீர்மானிக்கப்பட்டு, ஓராண்டாக ஆலய திருப்பணிகள் நடந்து வந்தன. பணிகள் முழுமையடைந்ததை அடுத்து, நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு, கணபதி பூஜை, ஹோமம், லட்சுமி ஹோமம், கோபூஜையும், மாலை 5:00 மணிக்கு, யாகசாலை பிரவேசம் உள்ளிட்ட முதல்கால பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து, நேற்று காலை 7:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜைகள் நிகழ்ச்சியை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், அப்பகுதியை சுற்றிலும் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !