தி.மலையில் புருஷா முனி வாகனத்தில் அண்ணாமலையார் உலா!
ADDED :3653 days ago
திருவண்ணாமலை அருணாசலேஸ்வார் கோவிலில் கார்த்திகை தீப விழாவில் ஒன்பதாம் நாள் காலை உற்வசத்த்தில் புருஷா முனி வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் எருந்தளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தீப விழாவை முன்னிட்டு கிரிவலப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள குதிரை சந்தையில் ஏராளமான வெளி மாநில குதிரைகள் ரூ.20 ஆயிரம் முதல் லட்சம் ரூபாய் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இதில் வண்ண மையான குதிரை வண்டிகள் ரூ.15 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளனர். கிரிவலப்பாதையில் முதல் முறையாக ஓட்டகம் சவரி செய்ய கொண்டு வரப்பட்டுள்ளனர். இதில் ஆவர்த்துடன் ஏராளமான சிறுவர்கள் சவரி செய்தனர். தீப விழாவை முன்னிட்டு, கோவில் தீப தரிசன மண்டபம் அருகே கண்காணிப்பு கோமரா பெருத்தப்பட்டுள்ளது.