கார்த்திகை சோமவாரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்!
ADDED :3897 days ago
சிதம்பரம்: நடராஜர் கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி மகா தீபாராதனை நடந்தது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் சோமவாரம் திங்கட் கிழமையையொட்டி, நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் நடராஜர் பொற்கூரை பிரகாரம் மற்றும் கொடி மரம் வலம் வந்து தரிசனம் செய்தனர்.