விருதுநகர் ராமர் கோயிலில் லட்ச தீப வழிபாடு
ADDED :3647 days ago
விருதுநகர்: விருதுநகர் ராமர் கோயிலில் விஷ்ணு கார்த்திகையை முன்னிட்டு லட்ச தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.திருப்பதி வெங்கடாசலபதிக்கு திருக்கார்த்திகை மறுநாள் விஷ்ணு கார்த்திகை வழிபாடு நடத்துவது வழக்கம். அதன் படி நேற்று விருதுநகர் ராமர் கோயில் திருப்பதி வெங்கடாசலபதிக்கு நேற்று விஷ்ணு கார்த்திகையையொட்டி சிறப்பு அலங்கார, தீபாராதனை நடந்தது. இதையொட்டி கோயிலில் லட்ச தீபங்கள் ஏற்றப்பட்டு கோயில் வளாகம், சுற்றுப்புறங்கள் ஒளி வெள்ளத்தில் மிதந்தது. பக்தர்களை பரவசமடைய செய்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.