உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு பெருவிழா!

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு பெருவிழா!

விழுப்புரம்: விழுப்புரம் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு பெருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழுப்புரம் புனித பிரான்சிஸ் சவேரியார் பங்கு ஆலய, ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு, சவேரியார் கொடி பவனி நடந்தது. நிகழ்ச்சிக்கு,  டி.அத்திப்பாக்கம் பங்குபணியாளர் மற்றும் பள்ளி முதல்வர் சகாய அருள்செல்வன் தலைமை தாங்கி, கொடியேற்றி வைத்தார். பங்கு பணியாளர் ஆல்பர்ட் பெலிக்ஸ், உதவி பங்கு பணியாளர் சகாயநாதன்  ஆகியோர் திருப்பலி நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து நேற்று முதல் வரும் 2ம் தேதி வரை மாலை தேர் பவனி மற்றும் திருப்பலி நடக்கிறது. அதனை தொடர்ந்து வரும் 3ம் தேதி ஆண்டு பெருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்கு பொது மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !