வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு பூஜை!
ADDED :3643 days ago
கீழக்கரை: உத்தரகோசமங்கை அருகே அகரம் கதைக்குளம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் உள்ளது. இங்கு கார்த்திகை சனிக்கிழமையை முன்னிட்டு 18 வகையான விஷேச திருமஞ்சனம் நடந்தது. மூலவர்கள் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வேத மந்திரங்கள் முழங்க நாலாயிர திவ்யபிரபந்தப் பாடல்கள் பாடப்பட்டது. விஷ்ணு சகஸ்ரநாமம், மகாலட்சுமி சகரஸ்நாம அர்ச்சனைகள் செய்யப்பட்டன. சிறப்பு அலங்கார தீபாராதனை, சாற்றுமுறை பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.