அன்னுார் அனுமான் விக்ரகம் பிரதிஷ்டை விழா!
ADDED :3755 days ago
அன்னுார்: சிறுமுகை நாராயணசாமி கோவிலில், அனுமான் விக்ரகம் பிரதிஷ்டை விழா நடந்தது.
சிறுமுகை அருகே சின்னக் கள்ளிப்பட்டி ஊராட்சி, செல்வ கணேசபுரத்தில், நாராயணசாமி கோவில் கட்டப்பட்ட உள்ளது.
அங்கு ராமபக்த அனுமான் விக்ரகம், 28ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு, யாகசாலை பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் நடந்தது. நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜை, திருமஞ்சனம் நடந்தது. காலை 9:30 மணிக்கு ராமபக்த அனுமான் சிலைக்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.