உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனீஸ்வர பகவான் கோவிலில் சங்கடகர சதுர்த்தி ஹோமம்!

சனீஸ்வர பகவான் கோவிலில் சங்கடகர சதுர்த்தி ஹோமம்!

புதுச்சேரி: மொரட்டாண்டி விஸ்வரூப சனீஸ்வர பகவான் கோவிலில், சங்கடகர சதுர்த்தியொட்டி கணபதி ஹோமம் நடந்தது.

புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி டோல் கேட் அருகில் உள்ள 27 அடி உயர விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவிலில், சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று 54 அடி உயர
கிரக சாந்தி கணபதிக்கு, 1008 கொழுக்கட்டை கணபதி ஹோமம், அபிஷேகம் தீபாராதனை நடந்தது.சிதம்பர குருக்கள் தலைமையில் கீதாசங்கர், கீதாராம் குருக்கள் முன்னிலையில் ஹோமம் நடந்தது. சீத்தாராம், நாகராஜ், சுப்ரமணியர், அசோக், அருண், சாமிநாதன், ஆனந்தராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !