உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வினைதீர்த்த விநாயகருக்கு இன்று கும்பாபிஷேகம்!

வினைதீர்த்த விநாயகருக்கு இன்று கும்பாபிஷேகம்!

சென்னை: திருவொற்றியூர், சாத்தாங்காடு, மேட்டுத் தெருவில் உள்ள, எல்லையம்மன் கோவிலில், புதிய வினைதீர்த்த விநாயகருக்கு, இன்று கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

இதையொட்டி, இன்று காலை 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள், எல்லையம்மன் கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும், வினைதீர்த்த விநாயகருக்கும், மகா கும்பாபிஷேகம் நிகழ உள்ளது. மாலை 6:00 மணிக்கு, மகாகணபதி திருவீதி உலா நடக்கும்.

ராயபுரத்தில்...ராயபுரம் கல்மண்டபத்தில் அமைந்துள்ளது, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். திருப்பணிகள் நிறைவடைந்து, ராஜகோபுரம் கட்டப்பட்டது. அதையடுத்து, இன்று கும்பாபிஷேகம் நடத்த, அறநிலையத் துறை தீர்மானித்தது.

கும்பாபிஷேக பணிகள், 25ம் தேதி, கணபதி பூஜையுடன் துவங்கியது. இன்று காலை, நான்காம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்ததும், காலை 8:45 மணிக்கு, ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும், கும்பாபிஷேகம் நடைபெறும்.காலை 9:15 மணிக்கு மேல், அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இன்று மாலை சுப்ரமணியர் திருக்கல்யாணமும், இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !