சின்னமாரியம்மன், பெரியமாரியம்மன் கோவில் திருவிழா!
ADDED :3638 days ago
ஈரோடு: கொங்கு நாட்டின் முக்கிய நகரமான ஈரோடு மாநகரில், காவிரி ஆற்றின் தென்பால் நீர்வளமும், நிலவளமும், செல்வ சிறப்பும் பொருந்திய கருங்கல்பாளையத்தில் எழுந்தருளியிருக்கும் சின்னமாரியம்மன், பெரியமாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த செவ்வாய்கிழமை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய வைபவமான, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி, டிசம்பர், ?ம் தேதி நடக்கிறது. குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர். இதனால், மாநகரமே விழாக் கோலம் பூணும். இதே நாளில் தேரோட்டமும் நடக்கிறது. டிச., 11ம் தேதி வரை விழா நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் தக்கார் ராஜூ, ஊர் கொத்துக்காரர்கள் செய்து வருகின்றனர்.