மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!
ADDED :3639 days ago
டி.என்.பாளையம்: கோபி தாலுகா, டி.என்.பாளையம் ஒன்றியம் புஞ்சைத்துறையம்பாளையம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவிலில், விநாயகர், மாரியம்மன் மற்றும் அங்காளம்மன் ஆகிய வகையறா கோவில்களும் அமைந்துள்ளன. இக்கோவில்களில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடந்தன. இந்நிலையில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. டி.என்.பாளையம் குமரன் கோவில் அர்ச்சகர் மந்திரிகிரி தலைமையில் சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் நடத்தினர். விழாவையொட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் கவுண்டர் ராஜம்மாள் ரங்கசாமி தலைமையில், விழா குழுவினர் செய்திருந்தனர்.