உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிபராசக்தி வார வழிபாடு மன்றத்தில் வேள்வி பூஜை!

ஆதிபராசக்தி வார வழிபாடு மன்றத்தில் வேள்வி பூஜை!

சிதம்பரம்: ஆதிபராசக்தி வார வழிப்பாட்டு மன்றம் சார்பில் உலக அமைதி வேண்டி வேள்வி பூஜை சிறப்பு வழிபாடு சிதம்பரத்தில் நடந்தது.  இதனையொட்டி, மன்றத்தில் உள்ள ஆதிபராசக்தி படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஆதிபராசக்தி சன்னதியில் 11 கலசம், 11 விளக்கு வைத்து பக்தர்கள் 1008 திருமந்திரங்கள் சொல்லி சிறப்பு பூஜை செய்தனர்.  நிகழ்ச்சிக்கு ஆதிபராசக்தி மன்றம் மாவட்ட நிர்வாகக் குழு தலைவர் கிருபாநந்தன் தலைமை தாங்கினார்.  இதில் சிதம்பரம் மன்றத் தலைவர் லோகநாதன், நிர்வாகிகள் பேராசிரியர்கள் பாலகுமார், ஞானக்குமார், டாக்டர் அர்ச்சுணன், சுமதி, சிவகாமி, அஞ்சம்மாள், ஜெயந்தி, சரவணன், சிவப்பிரியா, சூர்யா மற்றும் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !