சபரி மலைக்கு பாத யாத்திரை ஐயப்ப பக்தர்கள் புறப்பாடு!
ADDED :3635 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரையாக சபரிமலைக்கு புறப்பட்டனர். நெல்லிக்குப்பத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் 9ம் ஆண்டாக சபரிமலைக்கு வரக்கால்பட்டு குருசாமி நாராயணன் தலைமையில் 6 பேர் பாத யாத்திரையாக புறப்பட்டனர். முன்னதாக நெல்லிக்குப்பம் அருள்தரும் ஐயப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் செய்து வழிபட்டனர். குருசாமிகள் ராதா, துரைராஜ், கல்யாணசுந்தரம் ஆகியோர் பாதயாத்திரை குழுவினரை வாழ்த்தி வழியனுப்பினர். வழியில் உள்ள கோவில்களை தரிசனம் செய்தபடி 15 நாட்கள் நடைபயணமாக சென்று சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க உள்ளனர்.