வனபத்ரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை!
ADDED :5267 days ago
மேட்டுப்பாளையம் : வனபத்ரகாளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழாவில், பரிவேட்டை குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும், வாண வேடிக்கையும் நடந்தது. நேற்று காலை 108 திருவிளக்கு பூஜை நடந்தது. சுப்ரமணியர் கோவில் தலைமை அர்ச்சகர் தனசேகர குருக்கள் தலைமையில் பெண்கள் விளக்கு பூஜை செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் குமரேசன், பரம்பரை அறங்காவலர் வசந்தா, கட்டளைதாரர் கோவிந்தசாமி அண்ட் சன்ஸ் நிறுவனத்தினர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.