உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மொட்டபுளி கோவிலில் தீ மிதித்த ஐயப்ப பக்தர்கள்!

மொட்டபுளி கோவிலில் தீ மிதித்த ஐயப்ப பக்தர்கள்!

குளித்தலை: உப்புகாச்சிபட்டி கிராமத்தில், ஐயப்ப பக்தர்களின் எட்டாம் ஆண்டு தீமிதி விழா நடந்தது. கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, காவல்காரப்பட்டி சுற்றுவட்டாரத்தில், நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள், கடந்த, 15 நாட்களாக சபரிமலை ஐயப்ப ஸ்வாமிக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். விரதத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம், சபரிமலைக்கு பக்தர்கள் செல்வதற்கு முன்பாக, காவல்காரன்பட்டியிலுள்ள மொட்டபுளி கோவிலில், சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் விநாயகர், பாம்பாலம்மன், காளியம்மன், முருகன் ஆகிய கோவில்களுக்கு முன் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் தீ மிதித்து நேர்த்திகடன் செய்தனர். தொடர்ந்து, ஐயப்பன் ஸ்வாமி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், ஊர்வலமாக வந்து அபிஷேகம் செய்து அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !