பாலசுப்ரமணியம் கோவிலில் ராஜகோபுரம் கட்ட எதிர்பார்ப்பு
மல்லசமுத்திரம்: வையப்பமலை பாலசுப்ர மணியம் கோவிலில் ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்பது, ஆன்மீக அன்பர்களின் கோரிக்கையாக உள்ளது. திருச்செங்கோடு அடுத்த, மல்லசமுத்திரம் யூனியன் வையப்பமலையில், பாலசுப்ரமணியம் கோவில் உள்ளது. கடந்த, 200 ஆண்டு பழமையான இக்கோவிலில், முக்கிய விசேஷ நாட்களில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து ஸ்வாமியை வழிபட்டுச் செல்வது வழக்கம். இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில், தினமும் திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், தொழில் வளர்ச்சிக்கும், ஏராளமான மக்கள் படையெடுக்கின்றனர். அதற்காக வாரம் தோறும் செவ்வாய்கிழமை சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இக்கோவிலில், கடந்த, 2013ல் கும்பாபி?ஷகம் சிறப்பாக நடந்தது. சிறப்பு மிக்க இக்கோவிலில், ராஜகோபுரம் அமைக்க வேண்டும் என்பது ஆன்மீக அன்பர்கள் கோரிக்கை. அதற்காக, 50 லட்சம் ரூபாய் செலவாகும் என மதிப்பிட்டுள்ளது. அதில், 50 சதவீதம் இந்து அறநிலையத்துறை சார்பிலும், மீதித்தொகை, பக்தர்களிடம் இருந்து நன்கொடை வசூல் செய்து கொள்ள வேண்டும். இருந்தும், பணிகள் துவங்கப்படாமல் உள்ளது. எனவே, அதிகாரிகள் தலையிட்டு, நீண்ட நாள் கோரிக்கையான, ராஜகோபுரம் கட்டும் பணி துவங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.