அழகிரிநாதர் ஸ்வாமி கோவில் கண்ணாடி மாளிகை புதுப்பிப்பு!
ADDED :3591 days ago
சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாதர் ஸ்வாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, கண்ணாடி மாளிகை புதுப்பிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள கோட்டை அழகிரிநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும், டிச.,10ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரை நடக்கிறது. வரும், 21ம் தேதி , காலை, 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. விழாக்காலமான, 21 நாட்களும் ஸ்வாமி கண்ணாடி மாளிகையில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். கண்ணாடி மாளிகையானது, 5 லட்சம் ரூபாய் செலவில், கோவிலின் உட்புறத்தில், 35 கண்ணாடிகள் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஏகாதசி விழா துவக்கத்தையொட்டி, 25 ஆயிரம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.