உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மருக்கு ஸ்வாதி ஹோமம்!

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மருக்கு ஸ்வாதி ஹோமம்!

விழுப்புரம்: பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஸ்வாதியையொட்டி, சிறப்பு ஆராதனை மற்றும் ஹோமம் நடந்தது. விழுப்புரம்  மாவட்டம் பூவரசன்குப்பத்தில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஸ்வாதியை யொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு  அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, 8:30 மணிக்கு  தங்க கவசம் அணிவித்து, சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் அருள் பாலித்தார்.  9:00 மணிக்கு மகா தீபாராதனை, 9:30 மணிக்கு வரதராஜ பெருமாள் யாகசாலைக்கு புறப்பாடு, 10:00 மணிக்கு ஸ்வாதி ஹோமம், சுதர்சனம்,  தன்வந்திரி, பஞ்சசுத்த ஹோமங்கள், மதியம் 1:00 மணிக்கு பூர்ணாஹூதி நடந்தது. ஏற்பாடுகளை, செயல் அலுவலர் முத்துலட்சுமி, அர்ச்சகர்  பார்த்தசாரதி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !