உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் பிரகதீஸ்வரருக்கு மகா சங்காபிஷேகம்

மேட்டுப்பாளையம் பிரகதீஸ்வரருக்கு மகா சங்காபிஷேகம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத் தில், பக்தர்கள் முன்னிலையில் பிரகதீஸ்வரருக்கு மகா சங்காபிஷேகம் நடந்தது. மேட்டுப்பாளையம்  ஆசிரியர் காலனி, ரங்கராஜன் லே–அவுட்டில் ராஜஅஷ்ட விமோசன மகா கணபதி கோவில் உள்ளது. கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, இக்கோவிலில் உள்ள பிரகதீஸ்வரர் சுவாமிக்கு மகா சங்காபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமத்துடன், 108 சங்குகளில் தீர்த்தங்கள் ஊற்றி வைக்கப் பட்டன. அதற்கு மகா ஹோமம், ருத்ர ஹோமம், மகா பூர்ணாஹுதி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சங்குகளை பக்தர்கள் கையில் ஏந்தி கோவிலை வலம் வந்து, பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !