ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை
ADDED :3593 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. அமாவாசை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இக்கோவிலுக்கு பொள்ளாச்சி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் வருகின்றனர். நேற்று அமாவாசையையொட்டி, கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பல்வேறு பகுதியிலிருந்தும் வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். பலர் அம்பராம்பாளையம் ஆற்றில், இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர். பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.