வீற்றிருந்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :3592 days ago
பெண்ணாடம்: கார்த்திகை மாத அமாவாசையையொட்டி, பெண்ணாடம் வீற்றிருந்த பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையெ õட்டி, நேற்று காலை பெருமாள், தாயார், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 10:00 மணிக்கு திருமஞ்சனம், பகல் 12:00 மணிக்கு தீபாராதனை, 12:30 மணிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். அதேபோல், முக்குளம் பிடாரி செல்லியம்மன் கோவிலில், காலை 9:00 மணிக்கு சிறப்பு வழிபாடு, 10:30 மணிக்கு ராகுகால பூஜை, 12:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.