அர்ச்சுனேசுவரர் கோவிலில் 108 சங்காபிேஷக பூஜை
ADDED :3592 days ago
மடத்துக்குளம்: கடத்துார் அர்ச்சுனேசுவரர் கோவிலில், டிச.14ம் தேதி, 108 சங்காபிேஷக பூஜை நடக்கிறது. கடத்துார் அர்ச்சுனேசுவரர் கோவில், வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் ஒன்று. கி.பி.,950ல் கடத்துார் அமராவதி ஆற்றங்கரையில், விக்கிரம சோழமன்னரால் இந்தகோவில் அமைக்கப்பட்டது. கோமதியம்மன் உடனமர் அர்ச்சுனேசுவரர் எனவும், மருதமரத்தை ஸ்தலவிருட்சமாக கொண்டதால், மருதீசுவரர் எனவும் மூலவர் அழைக்கப்படுகிறார். இக்கோவிலில், டிச.14ம் தேதி மாலை, 4:00 மணிக்கு 108 சங்கு அபிேஷக பூஜை நடக்கிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ‘கார்த்திகை மாதத்தில் அக்னியாக இருக்கும் சிவனை குளிர்விக்க இந்த அபிேஷகம் செய்யப்படுவதாக ஐதீகம் உள்ளது’ என்றனர்.