உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜகோபால சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவம் துவக்கம்

ராஜகோபால சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவம் துவக்கம்

விருத்தாசலம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ராஜகோபால சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவம் நேற்று துவங்கியது. விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர், ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நேற்று துவங்கியது. காலை 8:00 மணிக்கு திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழி 1–2 பத்துக்கள், சாற்றுமுறை நடந்தது. தொடர்ந்து, ராஜகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நேற்று துவங்கி, வரும் 20ம் தேதி வரை பகல் பத்து உற்சவம் நடக்கிறது. 21ம் தேதி வைகுண்ட ஏகாதசி (சொர்க்கவாசல் திறப்பு) நிகழ்ச்சியுடன் ராப்பத்து உற்சவம் துவங்கி, 30ம் தேதி வரை நடக்கிறது. அன்று மாலை பெருமாள், நம்மாழ்வார் திருமஞ்சனம், ஆழ்வார் மோட்சம், கோஷ்டி தீர்த்தம் பிரசாதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.  31ம் தேதி திருப்பாவை, சாற்றுமுறை, இயற்பாசேவை, இயற்பா சாற்றுமுறை உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !