வைகுண்டஏகாதசி விழா: முத்து சாய கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்!
ADDED :3922 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவின் 4ம் நாளான இன்று நம்பெருமாள் முத்து சாய கொண்டை அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தை முன்னிட்டு, வைகுண்ட ஏகாதசி விழாவின் 4ம் நாளான இன்று நம்பெருமாள், மூலஸ்தானத்தில் இருந்து முத்து சாய கொண்டை, சிகப்பு கல் அபயஹஸ்தம், மார்பு வெள்ளை பதக்கம், முத்து மாலை அலங்காரத்தில் அலங்காரத்தில் ஆழ்வார்கள் புடைசூழ அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.