உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் 11.12.15 இரவு நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் 11.12.15  இரவு  அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்க கவசம் அணிவித்தனர். இரவு 12 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளியதும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கர்பூர தீபமேற்றி அம்மனை வழிபட்டனர்.

கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் தாலாட்டு பாடல்களையும், பக்தி பாடல்களையும் பாடினர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் பிரகாஷ், மோகனசுந்தரம், அறங்காவலர் குழு தலைவர் சேகர், அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ், கணேசன், செல்வம், சரவணன், மணி மேலாளர்கள் மணி, முனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். செஞ்சி டி.எஸ்.பி., முரளிதரன் தலைமையில் 100 க்கும் அதிமான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். தொடர்மழையிலும் சென்னை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !