சிங்கப்பூரில் 40 ஆண்டு தடைக்கு பின் மேளதாளத்துடன் தைப்பூச ஊர்வலம்!
ADDED :3590 days ago
சிங்கப்பூர்: தைப்பூசத் திருவிழாவினை மேளதாளத்துடன் ஊர்வலம் நடத்திக் கொண்டாட அனுமதி கொடுத்ததற்காக, சிங்கப்பூர் அரசுக்கு உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர்.கடந்த 40 ஆண்டு காலமாக சிங்கப்பூரில் தைப்பூச ஊர்வலம் நடத்தப்பட்டாலும், மேளதாளம் முழங்க அனுமதி அளிக்கப்படவில்லை. ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில் வரை ஜனவரி 24ம் தேதி நடைபெற உள்ள தைப்பூச ஊர்வலத்தில், நாதஸ்வரம், தவில், உருமி மேளம் ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இவற்றைப் பயன்படுத்த 1973 முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது.