லஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் ஏகதின லட்சார்ச்னை
ADDED :3699 days ago
புதுச்சேரி: புதுச்சேரி லஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் நரசிம்ம பெருமாளுக்கு ஏகதின லட்சார்ச்னை நடந்தது. புதுச்சேரி ராமகிருஷ்ணா நகரில் லஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் 4ம் ஆண்டு ஏகதின லச்சார்ச்சனை விழா நேற்று நடந்தது. கார்த்திகை மாத ஞாயிறன்று, பெருமாள் தனது மூன்றாவது கண்ணை திறந்து பார்ப்பதாக ஐதீகம். இக்கோவிலில் எழுந்தருளியுள்ள நவ நரசிம்மர் மற்றும் பானக நரசிம்மருக்கு நரசிம்ம சகரஸ்ரநாம அர்ச்சனை, ஏகதின லட்சார்ச்சனையாக நேற்று நடந்தது. பயம் நிவர்த்தி, தம்பதிகள் ஒற்றுமை, புத்திரபராப்தி, தொழில் முன்னேற்றம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும் என்பதால் மக்கள் லட்சார்ச்சனையில் பங்கேற்றனர்.