உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீஷீரடி சாய்பாபா பல்லக்கு ஊர்வலம்

ஸ்ரீஷீரடி சாய்பாபா பல்லக்கு ஊர்வலம்

திருப்பூர் : ஸ்ரீஷீரடி சாய்பாபா பல்லக்கு ஊர்வலம், வாண வேடிக்கையுடன், திருப்பூரில் நேற்றிரவு நடைபெற்றது. வாலிபாளையம் யுனிவர்சல் தியேட்டர் ரோட்டில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில், மூன்றாம் ஆண்டு துவக்க விழா, இன்று நடக்கிறது. இதையொட்டி, நேற்றிரவு, சாய் மகான் பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது; அமைச்சர் ஆனந்தன் துவக்கி வைத்தார். துணை மேயர் குணசேகரன் முன்னிலை வகித்தார். இன்று காலை, 10:00 மணிக்கு, 1,008 சங்காபிஷேகம், கலசாபிஷேகம் மற்றும் வேள்வி பூஜைகள் நடக்கின்றன. விநாயகர் பூஜையை தொடர்ந்து,திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள் பேசுகிறார். மதியம், அலங்கார சிறப்பு பூஜையை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை, 5:00 மணிக்கு சிறப்பு பஜனை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை, ஸ்ரீஷீரடி சாய்பீடம் டிரஸ்ட் தலைவர் ரவி, செயலாளர் ஏ.சக்திவேல், துணை செயலாளர் எஸ்.சக்திவேல், பொருளாளர் தண்டபாணி, துணை தலைவர் ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !