உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில் லட்ச தீப திருவிழா

திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில் லட்ச தீப திருவிழா

திருமழிசை: திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில், நேற்று, லட்ச தீப திருவிழா நடந்தது. திருவள்ளூர் மாவட் டம், வெள்ளவேடு அடுத்த, திருமழிசையில் உள்ளது குளிர்ந்த நாயகி சமேத ஒத்தாண்டேஸ்வரர் கோவில். இந்த கோவிலில், கார்த்திகை சோம வார, 17-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, நேற்று, லட்ச தீப திருவிழா நடந்தது.முன்னதாக, நேற்று முன்தினம், காலை, 9:00 மணிக்கு கணபதி ஹோமமும், மாலை, 6:00 மணிக்கு 108 சங்கு ஸ்தாபனமும், முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று, காலை, 7:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், காலை, 7:15 மணிக்கு மகா அபிஷேகமும், காலை, 9:00 மணிக்கு 108 சங்காபிஷேகமும் நடந்தது. பின், மாலை, 6:00 மணிக்கு லட்ச தீப திருவிழாவும், இரவு, 9:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடந்தது.இதில், திருமழிசை, வெள்ளவேடு, பூந்தமல்லி, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட சுற்று பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு, கோவில் வளாகம், குளக்கரையில் லட்ச தீபங்களை ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !