புதுப்பட்டு கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :3584 days ago
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டு சோமேஸ்வரர் கோவிலில் 108 சங்குகளால் அபிஷேகம் நடந்தது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டில் உள்ள சோமேஷ்வரர் சுவாமிக்கு, 108 சங்குகள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது. அதன்பின் ஹோம பூஜைகள் நடந்தது. தமிழகத்தில் பெய்த கனமழையால் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. பொதுமக்கள், மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.