உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை பாதையில் பக்தர்களுக்கு பாதுகாப்பு டிராக்டர்களுக்கு கட்டுப்பாடு

சபரிமலை பாதையில் பக்தர்களுக்கு பாதுகாப்பு டிராக்டர்களுக்கு கட்டுப்பாடு

சபரிமலை: பக்தர்களின் பாதுகாப்பை ருதி, சபரிமலை பாதையில் டிராக்டர்களின் வேகம் குறைக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரங்களில் டிராக்டர் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பம்பையில் இருந்து சன்னி தானத்துக்கு பொருட்கள் தலை சுமையாகவும், கழுதை மீது ஏற்றியும் கொண்டு செல்லப்பட்டது.கழுதைகளால் பக்தர்களுக்கு சிரமமும், கழுதை சாணத்தால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுவாமி ஐயப்பன் ரோடு அமைக்கப்பட்ட பின்னர் டிராக்டர்கள் ஓட தொடங்கியது. கரடுமுரடான ரோட்டில் டிராக்டர் செல்வது சிரமமாக இருந்த நிலையில், இந்த ரோடு கடந்த நான்கு ஆண்டு களுக்கு முன் கான்கிரீட்டாக போடப்பட்டது. இதனால் டிராக்டர்கள் எந்த சிரமமும் இல்லாமல் வந்து செல்கின்றன. கான்கிரீட் போடுவதற்கு முன்னால் ஒரு நாளில் ஒரு டிராக்டர் ஐந்து முறை சன்னிதானம் வந்து சென்றால் இப்போது 15 முறை வந்து செல்கிறது. பொருட்கள் தடையின்றி வந்ததால் கழுதைகள் முழுமையாக தடை செய்யப்பட்டன.தற்போது பக்தர்கள் திரும்பி செல்ல சுவாமி ஐயப்பன் ரோடு ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தப்படுகிறது. டிராக்டர்கள் வேகமாக செல்வதால் பக்தர்கள் செல்வதில் சிரமப்படுகின்றனர். இதுபற்றி புகார்கள் வந்தன. சபரிமலை நிர்வாக அதிகாரி ரேணுகோபால் தலைமையில் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது. இதில் டிராக்டர்களின் வேகத்தை மணிக்கு ஐந்து கிலோ மீட்டராக குறைக்க முடிவு செய்யப்பட்டது.அதிகாலை நான்கு மணி முதல் காலை ஒன்பது மணி வரையிலும், மாலை நான்கு மணி முதல் இரவு 10 மணி வரையிலும் டிராக்டர் ஓட்டு வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !