உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யப்ப பூஜை அன்னதானம் நீதிபதிகள் பங்கேற்பு

அய்யப்ப பூஜை அன்னதானம் நீதிபதிகள் பங்கேற்பு

அடையாறு: தர்ம சாஸ்தா ஸ்ரீ மணிகண்டன் பக்த சமாஜம் சார்பில் நடந்த, மலர் விளக்கு பூஜை அன்னதானத்தில், உயர் நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் கலந்து கொண்டனர். அடையாறு, சாஸ்திரி நகர் ஐந்தாவது குறுக்கு தெருவில், சாஸ்திரி நகர் சமூகநலக்கூடம் உள்ளது. அங்கு மண்டல பூஜையின் ஒரு பகுதியான, மலர் விளக்கு பூஜை நேற்று முன்தினம் காலை, 8:00 மணி முதல், மதியம் 12:00 மணி வரை, தர்ம சாஸ்தா ஸ்ரீ மணிகண்டன் பக்த சமாஜம் சார்பில் நடைபெற்றது.உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.வி., பாலசுப்ரமணியம், ஆர்.எஸ்., ராமநாதன், பசுமை தீர்பாய நீதிபதி பி.ஜோதிமணி, சட்ட வல்லுனர் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பூஜையில் பங்கேற்ற, 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆதம்பாக்கம் மற்றும் மறைமலை நகரில் உள்ள உதவும் உள்ளங்கள் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தைகளுக்கு, நேற்றும், நேற்று முன்தினமும் உணவு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !