உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்ட ஏகாதசி விரத முறை!

வைகுண்ட ஏகாதசி விரத முறை!

வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், முதல்நாளான தசமி அன்று ஒரு வேளை மட்டுமே சாப்பிட வேண்டும். ஏகாதசியன்று உண்ணாமலும், உறங்காமலும் விரதம் இருக்க வேண்டும். கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா,திரிவிக்கிரமா, வாமனா, ஸ்ரீதரா,ரிஷீகேஷா, பத்மநாபா, தாமோதரா என்று, திருமாலின் 12 திருநாமங்களை உச்சரித்தபடியே இருக்க வேண்டும்.மறுநாளான துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவு உண்ண வேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை இடம் பெறுதல் அவசியம்.அகத்திக்கீரையில் பாற்கடல்அமுதமும், நெல்லி, சுண்டைக்காயில் லட்சுமியின் அருளும் இருப்பதாக ஐதீகம். அன்று பகலிலும்உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும். எட்டு முதல் எண்பது வயது வரையுள்ளவர்களுக்கு ஏகாதசி விரதம் கட்டாயம். உடல்நிலை முடியாதவர்கள் மட்டும் விரத முறைகளில் விலக்கு பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இவர்கள் திருமாலின் திருப்பெயர்களை உச்சரித்தபடியே இருக்க வேண்டும். பூஜைக்கு வேண்டிய துளசியை ஏகாதசிக்கு முதல்நாளே பறித்துவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !