உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்தியில் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம்

திருப்தியில் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம்

திருப்பதி: இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று செவ்வாய்க்கிழமை காலையில் திருமலையில் எழுந்தருளியுள்ள ஏழுமலையானை தரிசனம் செய்தார். முன்னதாக கோவில் வந்த துணை ஜனாதிபதிக்கு சிறப்பு வரவேற்பு மரியாதை அளிக்கப்பட்டது.  ​​மாநில அறநிலையத்துறை அமைச்சர் அனம் ராமநாராயண ரெட்டி, தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு, செயல் அலுவலர் முட்டாதா ரவிச்சந்திரா, கூடுதல் செயல் அலுவலர் சி.எச். வெங்கையா சௌத்ரி மற்றும் தலைமை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி முரளி கிருஷ்ணா ஆகியோர் இணைந்து அவருக்கு உற்சாகமான வரவேற்பை அளித்தனர். மேலும், கோவில் அர்ச்சகர்கள் குழுவினர் அவருக்குத் தமிழ் மரபுப்படி இஷ்டிகபலம் எனும் சம்பிரதாயபூர்வமான வரவேற்பையும் அளித்தனர்.


அதனைத் தொடர்ந்து, துணை ஜனாதிபதி துவஜஸ்தம்பத்திற்கு (கொடிமரம்) மரியாதை செலுத்திய பிறகு, ஸ்ரீவாரு பகவானை வழிபடுவதற்காகச் சென்றார். பின்னர், அவர் வகுளமாதா தாயார் சன்னதி, விமான வெங்கடேஸ்வரர் சன்னதி, பாஷ்யகார சன்னதி (ராமானுஜர் சன்னதி) மற்றும் யோக நரசிம்ம சுவாமி சன்னதி ஆகிய இடங்களுக்குச் சென்று வழிபட்டார். பின்னர், ரங்கநாயகுல மண்டபத்தில் வேத விற்பன்னர்கள் அவருக்கு வேதாசீர்வாதம் (வேத மந்திரங்கள் மூலம் ஆசி) வழங்கினர். தேவஸ்தான தலைவரும் செயல் அலுவலரும் இணைந்து, மூலவரின் திருவுருவப்படத்தையும், தீர்த்த பிரசாதத்தையும் துணை ஜனாதிபதிக்கு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !