உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐய்யப்ப சேவா சங்கம் சார்பில் தீ மிதி திருவிழா

ஐய்யப்ப சேவா சங்கம் சார்பில் தீ மிதி திருவிழா

மூணாறு: மூணாறில் அகில பாரத ஐய்யப்ப சேவா சங்கம் சார்பில் 8ம் ஆண்டு மண்டல சிறப்பு பூஜை மற்றும் தீ மிதித் திருவிழா நடந்தது. இதை  முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி மற்றும் பார்வதியம்மன் கோயில்களில் ஹோமங்கள் நடைபெற்றன.  பார்வதியம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள்  பால் குடம் எடுத்து வந்தனர். அதில் முருகனுக்கு அபிஷேகமும்,சிறப்பு பூஜைகளும் நடந்தன. ஐயப்பன், முருகன், விநாயகர் அலங்கரிக்கப்பட்ட  சப்பரத்தில் வீதி உலா வந்தனர். பின்னர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் ஐயப்ப பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். சி றுவர்கள் உள்பட நுõற்றுக்கணக்கானோர் சரண கோஷங்கள் முழங்க, தீ மிதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !