உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தை முன்னிட்டு, நம்பொருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ஆண்டாள் முத்துக்கொண்டை,  ரத்தின அபயஹஸ்தம், இருதலை பட்ஷி, காசு மாலை அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, வரும், 21ம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 வைணவ தலங்களில் முதன்மையனாது. கோவிலில் கடந்த, 10ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா துவங்கி, தற்போது பகல் பத்து மற்றும் ராப்பத்து நிகழ்ச்சி நடந்து வருகிறது. விழாவில், முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா, வரும், 21ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு நடக்கிறது. விழாவை முன்னிட்டு, அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு திருச்சி கலெக்டர் பழனிசாமி, உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இதற்கு மாற்றாக, 2016 ஜனவரி, 9ம் தேதி வேலை நாளாக செயல்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !