உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை முதல் அதிகாலை 4 மணிக்கு கோயில்களில் நடை திறப்பு!

நாளை முதல் அதிகாலை 4 மணிக்கு கோயில்களில் நடை திறப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூர்: நாளை மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு தனுர் மாத பூஜைகள் துவங்குவதால் அதிகாலை 4மணிக்கு கோயில்கள் நடைதிறக்கபடுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்று இரவு 7 மணிக்குமேல் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதனையடுத்து நாளை முதல் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கபட்டு, ஆண்டாளுக்கு திருப்பாவை பட்டு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் ராமராஜா செய்துள்ளனர். மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் நாளை அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு நடக்கிறது. பகல் 11 மணிக்கு தீர்த்தவாரியும், தினமும் அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், விசேஷ பூஜைகளும் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல்அலுவலர் நாராயணி தலைமையில் பணியாளர்கள் செய்துள்ளனர். இதேபோல் முருகன்கோயில், பெரியமாரியம்மன் கோயில் உட்பட ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியிலுள்ள கோயில்களில் அதிகாலை நடைதிறக்கபடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !