உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூட்டை மாரியம்மன் கோவிலில் 13ம் தேதி தேர் திருவிழா

பூட்டை மாரியம்மன் கோவிலில் 13ம் தேதி தேர் திருவிழா

சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த பூட்டை மாரியம்மன் @காவில் திருவிழா வரும் 12ம் தேதி துவங்குகிறது. சங்கராபுரம் வட்டம் பூட்டை கிராமத்தில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவில் தேர் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் மூன்று நாட்கள் நடத்துவது வழக்கம். விழா நடத்துவதில் பிரச்னை ஏற்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் தடைபட்டது. பிரச்னை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கப்பட்டதால் இந்தாண்டு தேரோட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வரும் 12ம் தேதி காலை ஊரணிப் பொங்கல் நிகழ்ச்சியும், காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கிறது. இரவு வாண வேடிக்கை நிகழ்ச்சி, அம்மன் முத்துப் பல்லக்கில் வீதியுலா நடக்கிறது. மறுநாள் (13 ம் தேதி) சங்கராபுரம் எம்.,எல்.ஏ., மோகன் தலைமையில் தேர் திருவிழா துவங்குகிறது. சங்கராபுரம் ஒன்றிய சேர்மன் சந்திரசேகர், இந்து அறநிலைய துறை துணை ஆணையர் தங்கராஜ் முன்னிலை வகிக்கின்றனர். பாலப்பட்டு ஜாகீர் முத்துசாமி வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைக்கிறார். விழா ஏற்பாடுகளை பூட்டை, செம்பராம்பட்டு கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !