மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
ADDED :3581 days ago
அன்னுார்: அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்னுாரில் உள்ள பழமையான மன்னீஸ்வரர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தேரோட்டம் நடக்கிறது. இந்த ஆண்டு தேர்த்திருவிழாவில், ௧௬ம் தேதி காலை கிராம தேவதை வழிபாடு நடந்தது. இரவு கிராம சாந்தி நடந்தது. நேற்று அதிகாலை ௫:௩௦ மணிக்கு, கணபதி வேள்வி நடந்தது. காலை ௭:௫௦ மணிக்கு தேர்த்திருவிழா கொடியேற்றப்பட்டது. பின், அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில், முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா வந்து அருள்பாலித்தார். புளியம்பட்டி, அறுவத்து மூவர் அருட்பணி மன்றத்தினர் திருமறை வாசித்தனர். கட்டளைதாரர்கள், முன்னாள் அறங்காவலர்கள் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.