கிறிஸ்துமஸ் சிந்தனை: ஏழைகளுக்கு உதவுவோம்
இரண்டாம் உலகப்போரின் போது லண்டன் மக்கள் மீது, விமானங்கள் பொழிந்த குண்டு மழைக்கு பலர் இரையாகி விட்டனர். அவர்களின் குழந்தைகளை பங்குத்தந்தை ஒருவர் பணக்காரர்களுக்கு தத்து கொடுத்தார். ஒரே ஒரு அவலட்சணமான நீக்ரோ ஆண் குழந்தையை மட்டும் யாரும் தத்தெடுக்க மறுத்ததால், தனக்குத் தெரிந்த ஒரு அம்மையாரிடம் ஒப்படைத்தார்அவனை வீட்டுக்கு கூட்டிச் சென்ற அம்மையார் அதன் டவுசரை மாற்றிய போது, பையில் இருந்து சில காகிதங்கள் விழுந்தன. அதில் ஒன்று ஆயிரம் டாலருக்கான செக். இன்னொரு தாளில் “எங்கள் குழந்தையை யார் வளர்க்கிறார்களோ அவர்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக ஆயிரம் டாலரை இணைத்துள்ளோம். எங்கள் குழந்தையை நல்ல படியாக வளர்க்க கர்த்தர் உங்களுக்கு ஆசிர்வாதம் செய்வாராக!” என எழுதப்பட்டிருந்தது. அந்தப் பெண் கர்த்தருக்கு நன்றி சொன்னார்.இந்தக் குழந்தையின் கதையைப் போலவே, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நிலையும் அமைந்திருந்தது. எத்தனையோ பேருக்கு வீடு கட்டிக் கொடுத்த தச்சுத்தொழில் செய்த ஜோசப்பின் மகன் இயேசு பிறந்தது ஒரு மாட்டுத்தொழுவத்தில். எத்தனையோ பேருக்கு கட்டில் செய்து கொடுத்த அவரது மனைவி மேரி படுத்திருந்ததோ வைக்கோல் படுக்கையில். இவரை போல் இன்று சென்னை வெள்ளம் பலரை ஏழையாக்கி இருக்கிறது. அவர்களையெல்லாம், நம் குழந்தைகளாகக் கருதி இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் உதவ வேண்டும்.